வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 18 மே 2024 (07:28 IST)

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

இந்திய கிரிக்கெட் அணிக்கு மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் தலைமை பயிற்சியாளராக கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார் ராகுல் டிராவிட். ஆனால் அவர் தலைமையில் முக்கியமான சில கோப்பை தொடர்களில் இந்திய அணி தோற்று வெளியேறியது அதிருப்தியை ஏற்படுத்தியது. சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணி இறுதிப் போட்டியில் தோற்று மூன்றாவது முறையாகக் கோப்பையை வெல்ல இருந்த வாய்ப்பைத் தவறவிட்டது.

உலகக் கோப்பை தொடரோடு அவர் பதவி காலம் முடிந்தாலும் வரவிருக்கும் டி 20 உலகக் கோப்பை தொடர் வரை அவரின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டது. இப்போது ஜூன் மாதத்தோடு அவர் பணிக்காலம் முடிய இருக்கும் நிலையில் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை தேடும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது.

இதில் ஸ்டீபன் பிளமிங் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டு வரும் நிலையில் பிசிசிஐ விருப்பப் பட்டியலில் கவுதம் கம்பீரும் இருப்பதாக சொலல்ப்படுகிறது. இதற்காகதான் பாஜகவில் தீவிர இயங்கி வந்த கம்பீர், இந்த முறை தேர்தலில் போட்டியிட வில்லை என சொல்லப்படுகிறது.