வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 30 அக்டோபர் 2024 (07:50 IST)

‘கோலி, என்னை இன்ஸ்டாகிராமில் ப்ளாக் செய்திருந்தார்… அதுக்குக் காரணம் இதுதான்’ –சுயசரிதையில் மேக்ஸ்வெல்!

டி 20 கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஆஸி நாட்டின் கிளன் மேக்ஸ்வெல். இவர் ஐபிஎல் தொடர்களில் பஞ்சாப், டெல்லி மற்றும் பெங்களூரு ஆகிய அணிகளுக்காக விளையாடியும் இந்திய ரசிகர்களின் விருப்பத்துக்குரிய வீரரானார்.

கடந்த மூன்று சீசன்களாக அவர் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால் நடந்து முடிந்த தொடரில் அவர் மிக மோசமாக விளையாடியதால் அடுத்த சீசனில் அவரை பெங்களூர் அணி தக்க வைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் மேக்ஸ்வெல் தன்னுடைய சுயசரிதை புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். அதில் கோலி உடனான நட்பு குறித்து சில பக்கங்கள் பேசியுள்ளார். அதில் “நான் ஆர் சி பி அணியில் எடுக்கப்பட்டதும், கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் தேடினேன். ஆனால் எனக்குக் கிடைக்கவில்லை. அவரிடம் கேட்டேன் ‘நீங்கள் என்னை ப்ளாக் செய்திருக்கிறீர்களா?” என்று. அவர் “என்னை நீ பார்டர் கவாஸ்கர் தொடரில் கிண்டல் செய்த போது ப்ளாக் செய்தேன்” என்றார். ஆனால் இப்போது நாங்கள் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம்” எனக் கூறியுள்ளார்.