வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 23 அக்டோபர் 2024 (13:17 IST)

KKR அணியை விட்டு விலகுகிறாரா ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய அணியில் குறிப்பிடத்தக்க நடுவரிசை பேட்ஸ்மேனாக வளர்ந்து வந்தார் ஸ்ரேயாஸ் ஐயர். ஆனால் அவருக்கு அடிக்கடி ஏற்படும் காயம் மற்றும் அவரின் சீரற்ற ஆட்டம் ஆகியவற்றால் இப்போது அவரின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது. தற்போதைக்கு அவருக்கு இந்திய அணியில் ஒருநாள் அணியில் மட்டும்தான் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

டெஸ்ட் மற்றும் டி 20 அணியில் இடம்பிடிக்க அவர் கடுமையாக உழைத்து தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்நிலையில் கடந்த ஐபிஎல் சீசனில் ஸ்ரேயாஸ் தலைமையிலான கே கே ஆர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆனாலும் அவர் அணிக்குப் பெரிதாக பங்களிக்கவில்லை என்பது பலரும் அறிந்தது.

அதனால் தற்போது மெஹா ஏலத்துக்கான வீரர்களைத் தக்கவைப்பதில் கே கே ஆர் அணி ஸ்ரேயாஸை முதல் வீரராக தக்கவைக்கத் தயங்குகிறதாம். ரஸ்ஸல் மற்றும் சுனில் நரேனை முதல் மற்றும் நான்காம் வீரர்களாக 18 கோடி ரூபாய்க்குத் தக்கவைக்க விரும்புவதாகவும், ஸ்ரேயாஸை மூன்றாவது வீரராக 11 கோடி ரூபாய்க்கு தக்கவைக்க விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு அவர் ஒப்புக் கொள்ளாத பட்சத்தில் அவரிடம் இருந்து கேப்டன்சியை மாற்றவும் தயாராக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஸ்ரேயாஸ் இப்போது கே கே ஆர் அணியை விட்டு விலகவும் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கேப்டன் பதவி காலியாகவுள்ள ஆர் சி பி மற்றும் பஞ்சாப் அணிகளுக்குத் தாவ அவர் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.