திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 23 பிப்ரவரி 2023 (08:34 IST)

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்… காயத்தில் இருந்து மீண்ட மேக்ஸ்வெல் இணைகிறார்?

ஆஸி கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான க்ளென் மேக்ஸ்வெல் கால் எலும்பு முறிவு காரணமாக இன்னும் சில மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட முடியாத சூழல் உருவானது.  ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் லிமிடெட் ஓவர் ஸ்டார் ப்ளேயர்களில் ஒருவர் க்ளென் மேக்ஸ்வெல். அதுமட்டுமில்லாமல் ஐபிஎல் போட்டிகளில் தனது அதிரடியான ஆட்டம் மூலமாகவும் இந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் அவர் பார்ட்டி ஒன்றில் தடுக்கி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவர் சர்வதேசப் போட்டிகளில் விளையாடவில்லை.

இந்நிலையில் இப்போது காயத்தில் இருந்து குணமாகியுள்ள அவர், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதையடுத்து நடக்கும் ஐபிஎல் தொடரிலும் விளையாடுவார் என சொல்லப்படுகிறது. இது RCB அணிக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.