ஞாயிறு, 14 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (20:50 IST)

குழந்தை பெற்று கொள்ள ஆசை.. ராகுல் காந்தி பேட்டி..!

rahul gandhi
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இதுவரை திருமணம் செய்யாத நிலையில் தனக்கு குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை என்று பேட்டி அளித்திருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
திருமணம் செய்வது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் ஆனால் நான் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறேன் என்றும் அவர் திருமணம் குறித்த கேள்விக்கு பதில் தெரிவித்துள்ளார். 
 
மேலும் யாத்திரை முடியும் வரை தாடியை ஷேவ் செய்யப் போவதில்லை என்று முடிவு செய்திருந்தேன் என்றும் இனிமேலாவது தாடியை எடுப்பதா அல்லது நீடிக்க விடுவதா? என்பதை இனிமேல் தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். 
 
தனது பாட்டி இந்திரா காந்தி குறித்து அவர் கூறிய போது எனது பாட்டிக்கு என்னை மிகவும் பிடிக்கும் என்று ஆனால் இத்தாலி பாட்டிக்கு என்னை விட பிரியங்கா காந்தியை தான் பிடிக்கும் என்று தெரிவித்தார்.
 
Edited by Siva