புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (09:03 IST)

ஷேன் வார்னுடன் நான் ரகசிய உறவில் இருந்தேன்… உலகின் அழகான பாட்டி உடைத்த சீக்ரெட்

கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் சில மாதங்களுக்கு முன்னர் இயற்கை எய்தினார். இது கிரிக்கெட் ரசிகர்களை மீளாசோகத்தில் ஆழ்த்தியது.

உலகின் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷேன் வார்னே(52) கடந்த மார்ச் மாதம் தாய்லாந்து சென்ற போது அங்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் அவரின் மறைவுக்கு பிறகு உலகின் அழகான பாட்டி என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் 51 வயதாகும் ஜினா ஸ்டிவார்ட் “நானும் வார்னும் ரகசியமாக உறவில் இருந்தோம்” என்று கூறியுள்ளார். மேலும் அவர் “நான் ஒரு நல்ல நண்பரை இழந்துள்ளேன். கடந்த சில மாதங்களாக பெருந்துயரில் இருக்கிறேன். நானும் அவரும் 2018 ஆம் ஆண்டு சந்தித்தோம். ஒருவரிடம் ஒருவர் பேசி நன்கு புரிந்துகொண்டோம். அவரோடு இருக்கும் உறவை நான் வெளியுலகத்துக்கு தெரிவிக்க மாட்டேன் என்று உறுதியளித்திருந்தேன்” எனக் கூறியுள்ளார்.

ஷேன் வார்ன் உலகம் முழுவதும் பல பெண்களோடு இதுபோல உறவில் இருந்ததாக தகவல்கள் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.