1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 17 ஆகஸ்ட் 2022 (22:17 IST)

இந்தியா-ஜிம்பாவே முதல் ஒருநாள் போட்டி: நாளை பலப்பரிட்சை

Cricket
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ளது
 
 இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே சென்று உள்ளது என்பதும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது என்பது குறித்து இரு அணிகளும் கடைசியாக மோதிய ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நாளை நடைபெற உள்ள முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு கேஎல் ராகுல் கேப்டனாக செயல்படுவார். இந்திய அணியின் முழு விபரம் வருமாறு
 
இந்தியா: லோகேஷ் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், சுப்மன் கில், ராகுல் திரிபாதி, அக்சர் படேல், ஷர்துல் தாகூர், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், அவேஷ்கான், ஷபாஸ் அகமது