தொடர்புடைய செய்திகள்
- விமர்சனம் செய்வது எளிது… இந்திய அணிக்கு சப்போர்ட்டாக பேசிய அஸ்வின்!
- மோடி வீட்டுலதான் கொடி ஏத்துவார்.. காங்கிரஸ் சொன்னது சரிதான்! - அதிமுக எம்.பி தம்பிதுரை!
- உலகக் கோப்பையில் இந்தியா vs ஆஸ்திரேலியா … ஆன்லைன் டிக்கெட் விற்பனை எப்போது?
- இந்திய குடியுரிமை பெற்றார் நடிகர் அக்ஷய் குமார்: மகிழ்ச்சியுடன் ட்விட் பதிவு..!
- பாகிஸ்தானை ஜெயிக்க அவங்க உள்ள வருவாங்க! – அணி தேர்வு குறித்து டிராவிட் சூசகம்!
இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை… வெளுத்து வாங்கிய சுனில் கவாஸ்கர்!
வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்றுள்ளது. அடுத்து இப்போது 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் நடைபெற்று வந்த நிலையில் அதை 3-2 என்ற கணக்கில் இழந்துள்ளது. இந்த தொடர் தோல்வியின் மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸிடம் இந்திய அணி ஒரு தொடரை இழந்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது குறித்து பேசிய முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் “இரண்டு முறை டி 20 உலகக் கோப்பை வென்ற பலமான வெஸ்ட் இண்டீஸிடம் இந்திய அணி தோற்றதில் அவமானம் ஒன்றும் இல்லை.
ஆனால் சில இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை. அவர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் கோடிகளில் புரள்கிறார்கள். அங்கே தங்கள் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட வேண்டுமென்றுதான் விரும்புகிறார்கள். அண்டர் 19 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் சில இளம் வீரர்கள் தேசிய அணிக்காக விளையாடும் போது சொதப்புவதை நாம் பார்க்கிறோம்” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்