திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 16 ஆகஸ்ட் 2023 (07:21 IST)

உலகக் கோப்பையில் இந்தியா vs ஆஸ்திரேலியா … ஆன்லைன் டிக்கெட் விற்பனை எப்போது?

இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடக்க உள்ளது. இந்த முறை முழு உலகக் கோப்பை தொடரும் இந்தியாவிலேயே நடக்கிறது. இந்த தொடருக்கான முதல்கட்ட அணிகளை செப்டம்பர் 28 ஆம் தேதிக்கு முன்னதாக 15 பேர் கொண்ட அணிகளை அறிவிக்க வேண்டும்.

இந்திய அணி உலகக் கோப்பையில் தங்கள் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை சென்னையில் எதிர்கொள்கிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் இந்த போட்டிக்கான டிக்கெட்களை வாங்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில் இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 31 ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடக்கும் மற்ற போட்டிகளுக்கான டிக்கெட்கள் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதலே ஆன்லைனில் விற்பனைக்கு கிடைக்கும் என சொல்லப்படுகிறது.