வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 12 ஜூன் 2023 (09:00 IST)

இப்படித்தான் மத்தவங்க கிரெடிட்ட திருடுறாங்க..? – ஆதங்கத்தை கொட்டிய கம்பீர்!

நேற்றைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில் அதுகுறித்து பேசிய கவுதம் கம்பீர் இந்திய அணியின் பிரச்சினையாக தான் பார்க்கும் தனி மனித துதிபாடல்களை காட்டமாக விமர்சித்துள்ளார்.



லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் படுதோல்வி அடைந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் கிரிக்கெட் பயிற்சியாளர்கள், முன்னாள் வீரர்கள் என பலரும் தோல்விக்கு காரணம் என தாங்கள் கருதும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் கருத்து தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் இந்திய கிரிக்கெட்டில்தான் தனிமனித துதி பாடுவது அதிகம் உள்ளதாக விமர்சித்துள்ளார். மற்ற நாட்டு கிரிக்கெட் அணிகளில் வெற்றி பெற்றால் அது மொத்த அணியின் வெற்றியாக இருப்பதாகவும், இந்திய அணியில் மட்டும் அது தனிநபரின் வெற்றியாக பார்க்கப்படுவதாகவும், அதனால்தான் இந்தியாவால் முன்னேற முடியவில்லை என்ற ரீதியில் விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.

1983 world cup


மேலும் “1983 உலகக்கோப்பை வெற்றி குறித்து பேசும்போது அனைவருக்கும் கோப்பையுடன் கபில்தேவ் இருக்கும் புகைப்படம்தான் காட்டப்படுகிறது. அந்த கோப்பையுடன் வேறு வீரர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அந்த தொடரின் அரையிறுதி மற்றும் இறுதி போட்டியில் மோஹிந்தர் அமர்நாத் ஆட்டநாயகன் விருதை வென்றார் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

2011ல் நடத்த 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் கௌதம் கம்பீர், தோனி இருவரும் அணியில் இருந்தனர். இலங்கை அணியுடனான இறுதி போட்டியில் கவுதம் கம்பீர் 97 ரன்கள் அடித்து கொடுத்திருந்தாலும், 91 ரன்கள் அடித்து பினிஷிங் செய்த தோனிக்கே ஆட்டநாயகன் விருது தரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K