தொடர்புடைய செய்திகள்
- தேசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகும் விவிஎஸ் லட்சுமணன்! – கங்குலி தகவல்!
- டி-20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் முதலிடம்
- தொடர்ச்சியாக 16 போட்டிகளில் வெற்றி: பாகிஸ்தானுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆஸ்திரேலியா!
- அரை இறுதிக்கு முன் நாள் வரை ICU-ல் இருந்த ரிஸ்வான்: வைரல் புகைப்படம்!
- டி-20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி சூப்பர் வெற்றி
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கு வாய்ப்பிருக்கிறதா? கங்குலி சொன்ன பதில்!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் அரசியல் காரணங்களால் இரு நாட்டு கிரிக்கெட் தொடரை விளையாடுவதில்லை.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி ஒரு போர் போல ஊடகங்களாலும், ரசிகர்களாலும் மிகைப்படுத்தப்பட்டு பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த உலகக்கோப்பைத் தொடரின் இறுதி ஆட்டத்தை விட இந்தியா பாகிஸ்தான் போட்டியைதான் அதிக ரசிகர்கள் பார்த்தார்கள் என்பதே அதற்கு சான்று.
இத்தனைக்கும் இவ்விரு அணிகளும் ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே நேருக்கு நேர் கலந்துகொள்கின்றன. தனியாக இருநாட்டுத் தொடர் நடந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இதுபற்றி இப்போது பிசிசிஐ தலைவராக இருக்கும் கங்குலியைக் கேட்ட போது அதை இரு நாட்டு அரசுகள்தான் முடிவு செய்யமுடியும். இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் முடிவு செய்ய முடியாது எனக் கூறியுள்ளார்.