1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 21 செப்டம்பர் 2022 (07:54 IST)

மகளிர் கிரிக்கெட் தரவரிசை: இந்திய வீராங்கனை மந்தனா முன்னேற்றம்!

mandhana
மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனை இரண்டாவது இடத்துக்கு முன்னேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சர்வதேச பெண்கள் 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டியின் அடிப்படையில் வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது 
 
சர்வதேச டி20 பட்டியலில் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி முதலிடத்தில் உள்ளார். இதனை அடுத்து இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இரண்டாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 111 ரன்கள் எடுத்ததன் மூலம் அவருக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் ஒருநாள் போட்டி தரவரிசையில் ஆஸ்திரேலிய வீராங்கனை அலிசா ஹீலி முதலிடத்தில் உள்ளார் என்பதும் இந்திய வீராங்கனை மந்தனாவுக்கு 7வது இடம் கிடைத்துள்ளது என்று குறிப்பிடத்தக்கது., இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத்திக்கு 9வது கிடைத்துள்ளது.