புதன், 6 டிசம்பர் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 3 ஜூன் 2023 (08:58 IST)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி… மைக் பிடிக்கும் கங்குலி!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 7 முதல் 11 ஆம் தேதி வரை லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டிக்கான வர்ணனையாளர்கள் பட்டியல் இப்போது வெளியாகியுள்ளது. ஆங்கில மொழி வர்ணனையாளர்களாக  ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர், மேத்யூ ஹேடன், நாசர் உசைன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தி மொழிக்கு இந்தி மொழிக்கு சவுரவ் கங்குலி, ஹர்பஜன் சிங், தீப் தாஸ்குப்தா, ஸ்ரீசாந்த் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் மொழிக்கு யோ மகேஷ், சடகோபன் ரமேஷ், லட்சுமிபதி பாலாஜி, ஸ்ரீதரன் ஸ்ரீராம் ஆகியோரும் வர்ணனையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பாகிறது. பிசிசிஐ தலைவராக இருந்த கங்குலி, அதன் பிறகு முதல் முறையாக வர்ணனையாளராக களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.