திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 1 மே 2022 (15:30 IST)

கேப்டன் பதவி ஜடேஜாவுக்கு ஒத்து வராது.. அவரே புரிஞ்சிகிட்டார்! – பிரபல கிரிக்கெட் வீரர் கருத்து!

சென்னை அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஜடேஜா விலகியதை பிரபல கிரிக்கெட் வீரர் வரவேற்றுள்ளார்.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி சிறப்பாக நடந்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. அணியின் முந்தைய கேப்டன் தோனிக்கு பதிலாக இந்த முறை கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார்.

ஆனால் ஜடேஜா கேப்டன் ஆனது முதலாக அணி தோல்வியை சந்தித்து வரும் நிலையில் ஜடேஜாவாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இயலவில்லை. இதனால் தான் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாகவும், மீண்டும் தோனியே கேப்டன் பதவியை வகிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

அதன்படி இன்றைய போட்டியில் தோனி மீண்டும் கேப்டனாக களம் இறங்க உள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் “ஜடேஜா போட்டி தொடங்குவதற்கு சில நாட்கள் முன்னதாக கேப்டன் பதவியை பெற்றார். அதுமுதல் அவரால் பேட்டிங், பீல்டிங் எதையும் சிறப்பாக செய்யமுடியவில்லை. இந்த கட்டத்தின் கேப்பிட்டன்சி தனக்கு உகந்தது இல்லை என்பதை அவர் உணர்ந்துவிட்டார். இனி அவரது பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் அவர் கவனம் செலுத்தி ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பார்” என தெரிவித்துள்ளார்.’