வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 28 செப்டம்பர் 2023 (20:29 IST)

#WolrdCup2023: : இந்திய அணிவில் பிரபல வீரருக்கு பதிலாக அஸ்வின் சேர்ப்பு

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான அணி வீரர்கள் தேர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில் தற்போது உலகக்கோப்பைகான இந்திய அணி வீரர்கள் குழுவை பிசிசிஐ அறிவித்தது.

அதில், ரோகித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாகுர், ஜாஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர். சஞ்சு சாம்சன், ப்ரசித் கிருஷ்ணா உள்ளிட்ட சில வீரர்கள் எதிர்பார்க்கப்பட்டது போல அணியில் இடம்பெறவில்லை எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில், உலகக்கோப்பை தொடருக்காக  பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வந்து பயிற்சி மேற்கொண்டுள்ளது. இன்று  விராட் கோலி உள்ளிட்ட இந்திய அணி வீரர்களும் கவுஹாத்திக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையி, 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் காயத்தில் இருந்து மீளாத அக்ஸர் படேலுக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.