வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 20 மே 2021 (11:36 IST)

கரும்பூஞ்சை தொற்று: தமிழகத்தில் முதல் பலி!

உலகம் முழுக்க உள்ள மக்களை கொரோனா நோய் தொற்று வாட்டி வதைத்த நிலையில் தற்போது கரும்பூஞ்சை எனப்படும் நோய் இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. கொரோனா நோய் பாதிப்புக்கு ஆளான நீரிழிவு நோயாளிகள் மீண்டு வர ஸ்டீராய்டு எனப்படும் மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. 
 
இதனால் உடலில் எதிர்ப்பு சக்தி குறைவதால் மக்கள் இந்நோயினால் எளிதில் தாக்கப்படுகிறன்றனர். அதுமட்டுமல்லாது கொரோனாவில் இருந்து மீண்ட சர்க்கரை நோயாளிகள் சுற்றுச்சூழலில் உள்ள mucor-mycosis என்ற பூஞ்சை தொற்றுக்கு அதிகம் ஆளாகின்றனர். கரும்பூஞ்சையினால் தாக்கப்பட்டவர்களுக்கு கண்வலி,கண் வீக்கம், பின்னர் பார்வை இழப்பு போன்றவை ஏற்படுகிறது. 
 
இந்நோயின் உச்சகட்டமாக  மூக்கில் ரத்தம் வருதல், பின்னர் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு பலியாவது போன்ற கொடூரமான சம்பவங்களுக்கு ஆளாகின்றனர். இந்த புதிய நோய் நாடுமுழுக்க  10 முதல் 20 மடங்கு அதிகரித்துள்ள இந்நிலையில் தமிழகத்தில் கரும்பூஞ்சை தொற்றுக்கு ஆளான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 57 வயது நபர் ஒருவர் பலியாகியுள்ளார். இதுவே கரும்பூஞ்சை நோயின் முதல் பலி என்பது குறிப்பிடத்தக்கது.