1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Even though they won.. CSK made that bad record! - Fans are upset!

ஜெயிச்சாலும்.. அந்த மோசமான சாதனையை செய்த சிஎஸ்கே! - ரசிகர்கள் வருத்தம்!

IPL 2025

நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிரடியாக விளையாடி டேபிள் டாப்பர் குஜராத் டைட்டன்ஸை கலங்கடித்திருந்தாலும் சிஎஸ்கே அணி இதுவரை இல்லாத மோசமான சாதனையை படைத்துள்ளது.

 

ஐபிஎல் போட்டிகளில் ப்ளே ஆப் போட்டிகள் செல்வதற்கான அணிகள் தகுதி பெற்று விட்ட நிலையில் மீத போட்டிகள் ஒரு ஃபார்மாலிட்டியாகவே நடந்து வருவது போல தோன்றினாலும், கடைசி நேரத்தில் எலிமினேடட் அணிகள் அதிரடி காட்டி வருவது ஆச்சர்யத்தை அளித்து வருகிறது.

 

நேற்று டேபிளில் 10வது இடத்தில் உள்ள சிஎஸ்கே அணியும், முதல் இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிக் கொண்ட நிலையில் 230 ரன்களை குவித்த சிஎஸ்கே அணி சேஸிங்கில் குஜராத்தை 18.3 பந்துகளிலேயே 147 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து தாங்கள் கிங்ஸ் என்பதை மீண்டும் நிரூபித்தது.

 

இந்த சீசனில் இந்த போட்டியே சிஎஸ்கேவுக்கு கடைசி போட்டி மற்றும் 14 போட்டிகளில் சிஎஸ்கே வென்ற 4வது போட்டி இதுவாகும். இதன்மூலம் 8 புள்ளிகளை பெற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சமன் செய்தாலும், நெட் ரன் ரேட்டில் ராஜஸ்தானை விட குறைவாக இருப்பதால் சிஎஸ்கே புள்ளிப்பட்டியலில் 10வது இடத்திலேயே தொடர்கிறது. 

 

இதனால் இதுவரையிலான ஐபிஎல் சீசன்களில் சிஎஸ்கே அணி டேபிளின் கடைசி இடத்தில் ஃபினிஷ் செய்தது இல்லை என்ற ரெக்கார்ட் உடைப்பட்டு இது மோசமான சாதனையாக மாறியது ரசிகர்களை வருத்தம் கொள்ள செய்துள்ளது. எனினும் சிஎஸ்கே அடுத்த சீசனில் வெற்றிக் கொண்டு எழுவதற்கான புதிய நம்பிக்கைகளை இந்த சீசன் விதைத்துள்ளது.

 

Edit by Prasanth.K

About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
மீண்டும் ஐபிஎல்லா? ஸ்ட்ராபெர்ரி விவசாயமா? ‘தல’ தோனி எடுக்கப்போகும் முடிவு!?