1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Jithesh sharam philosophical approach about SRH defeat

‘சில நேரங்களில் தோல்வியும் நல்லதுதான்’… ஆர் சி பி கேப்டன் ஜிதேஷ் ஷர்மா!

SRH vs RCB
பரபரப்பாக நடந்து வரும் இந்தாண்டு ஐபிஎல் சீசனில் அதிகமான போட்டிகளில் வெற்றி பெற்று ஆர்சிபி, குஜராத், பஞ்சாப், மும்பை அணிகள் ஏற்கனவே ப்ளே ஆப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுவிட்டன. இந்நிலையில் தற்போது நடந்து வரும் போட்டிகள் ஒரு ஃபார்மாலிட்டிக்காக நடப்பது போல அமைந்தாலும், அதிலும் தகுதி பெறாத அணிகள் அட்டகாசம் செய்து வருகின்றன. 

இப்போது தேர்வு பெற்ற அணிகளுக்குள் யார் முதலிரண்டு இடங்களைப் பிடித்து மிகவும் பாதுகாப்பான இடத்தைப் புள்ளிப் பட்டியலில் பிடிப்பது என்ற போட்டி எழுந்துள்ளது. அந்த வகையில் நேற்று நடந்த ஆர் சி பி அணிக்கு முக்கியமான போட்டியில் அந்த அணி சன் ரைசர்ஸ் ஐதராபாத்திடம் தோற்றுள்ளது.

இந்த போட்டிக்குப் பின்னர் பேசிய அந்த அண்யின் தற்காலிகக் கேப்டன் ஜிதேஷ் ஷர்மா “சில நேரங்களில் தோல்வி கூட நல்லதுதான். ஏனென்றால் அப்போதுதான் நாம் எங்கே தவறு செய்கிறோம் என்பதைத் தெரிந்து கொண்டு அதை சரிசெய்துகொள்ள முடியும். தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டே இருந்தால் நான் குறைகளை கவனிக்க மாட்டோம்.” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
ஒரு அணிக்காக அதிக பவுண்டரிகள்… கிங் கோலி படைத்த புதிய சாதனை!