தொடர்புடைய செய்திகள்
- ரோஹித் ஷர்மாவைக் காப்பாற்ற பார்க்கிறார் கங்குலி… வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
- கோலி அப்படி ஒரு முடிவெடுப்பார்னு நாங்க எதிர்பார்க்கவே இல்ல… மனம் திறந்த கங்குலி!
- உலகக் கோப்பையை வெல்வதை விட ஐபிஎல் வெல்வது கடினம்… கங்குலி கருத்து!
- சண்ட வந்தா களத்துல மட்டும்தான்.. கோலி, கம்பீர் உடனான உறவு குறித்து கம்பீர்!
- இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற வாய்ப்பிருக்கு… கங்குலி சொல்லும் கணக்கு!
கோலிய ஒரு கேப்டனா நான் மிஸ் பண்றேன்… உலகக்கோப்பை வென்ற இங்கி. கேப்டன் கருத்து!
கடந்த ஆண்டு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, டி 20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். பின்னர் அவர் ஒரு நாள் அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனால் பிசிசிஐக்கும் கோலிக்கும் இடையே கருத்து மோதல்கள் உள்ளதாக கிசுகிசுக்கப்பட்டன. மேலும் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து நிர்பந்திக்கப்பட்டு விலகியதாகவும் கங்குலி மேல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனால் டெஸ்ட் போட்டிகளை தன்னுடைய ஆக்ரோஷமான கேப்டன்சியில் வழிநடத்திய கோலியை பலரும் இப்போது மிஸ் செய்வதாக கூறி வருகின்றனர். அந்த வரிசையில் இப்போது இணைந்துள்ளார் இங்கிலாந்து அணிக்காக உலகக்கோப்பையை வென்ற இயான் மோர்கன்.
சமீபத்தில் நடந்த டெஸ்ட் போட்டி முடிந்ததும் கோலி பற்றி பேசிய மோர்கன் “டெஸ்ட் கிரிக்கெட் எனக்கு எப்போதுமே நம்ப முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. வீரர்களுக்கு சவாலை அளிக்கக் கூடியது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு கேப்டனாக கோலியை மிஸ் செய்வதாக நான் உணர்கிறேன். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் நேசித்தார். அதே போல டெஸ்ட் விளையாட எப்போதும் ஆர்வமாக இருந்தார்” எனக் கூறியுள்ளார்.