வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 10 நவம்பர் 2022 (16:32 IST)

கோவை கார் வெடிப்பில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்! - என்.ஐ.ஏ தகவல்

covai
கோவை கார் வெடிப்பு  சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வரும் நிலையில், இதில், முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

கோவை உக்கடத்தில் கார் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலியான நபரின் வீட்டிலிருந்து ஏராளமான வெடிப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவருடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, கார் வெடித்ததில் இறந்த முபினின் உறவினர் அஃப்சர் கான் என்பவரையும்  6 வது நபராக போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை கார் வெடிப்பு வழக்கை  தமிழகக் காவல்துறை விசாரித்து வந்த நிலையில், என்.ஐ.ஏ என்ற தேசிய புலனாய்வு முகமை விசாரிக்கும் என முதல்வர் ஸ்டாலின் பரிந்திரைத்த நிலையில், என்.ஐ.ஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த வழக்கில், தேசிய புலனாய்வு முகமைக்குப் போதிய ஒத்துழைப்புக் கொடுத்து,  தமிழகக் காவல்துறையும்  இணைந்து செயல்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக, சென்னை, கோவை, கேரளா உள்ளிட்ட 43 இடங்களில் இன்று என்.ஐ.ஏ சோதனை  நடத்தியது.

இதில்,   கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் என்.ஐ.ஏ நடத்தி வரும் சோதனையில் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும்  முக்கிய ஆவணங்கள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும்,இந்த வெடிவிபத்து வழகில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேரும் ஜமேசஷா முபீனுடன் இணைந்து சதிச் செயலில் ஈடுபட உதவியாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj