செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 10 நவம்பர் 2022 (15:15 IST)

கடைசி பந்தில் பவுண்டரி அடித்தும் பயனில்லை… வித்தியாசமாக அவுட் ஆன பாண்ட்யா!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஹர்திக் பாண்ட்யா அரைசதம் அடித்து விளாசினார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் வழக்கம் போல தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஏமாற்ற, கோலி நிதானமாக விளையாடி அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த பாண்ட்யா, கடைசி நேர அதிரடியில் இறங்கி 33 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்து இந்திய அணியை 168 என்ற கௌரவமான இலக்குக்கு அழைத்து வந்தார்.

இந்த போட்டியின் கடைசி பந்தில் அவர் பவுண்டரி அடித்தார். ஆனாலும் அந்த பந்தை அடிக்கையில் அவர் ஸ்டம்புகளை காலால் தட்டி ஹிட் விக்கெட் ஆனார். அதனால் அந்த பவுண்டரி இந்திய அணியின் ரன்களில் சேராமல் போனது.