திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 1 ஜூலை 2023 (08:05 IST)

உலகக் கோப்பை கொண்டாட்டம்.. சச்சினை தூக்க கோலியை தேர்வு செய்தது ஏன்?- சேவாக் அளித்த விளக்கம்!

2023 ஆம் ஆண்டுக்கான 13 ஆவது 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த தொடர் பற்றிய பரபரப்பான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவலை சேவாக் பகிர்ந்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கையை வென்று கோப்பையை கைப்பற்றியது. அந்த போட்டி முடிந்ததும் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை தோளில் தூக்கி சுமந்தபடி வலம் வந்தார் அப்போதைய இளம் வீரர் விராட் கோலி.

இந்நிலையில் இந்த நிகழ்வு குறித்து பேசிய சேவாக் “அணியில் இருந்த மூத்த வீரர்கள் அனைவருக்கும் வெவ்வேறு உடல்நலப் பிரச்சனைகள் இருந்தன. எனக்கு தோள்வலி, தோனிக்கு முழ்ங்கால் வலி. அதனால் சச்சினை தூக்கி சுமக்கும் பணியை இளைஞர்களிடம் ஒப்படைத்தோம். அதனால்தான் கோலி சச்சினை தூக்கி சுமந்தார்” எனக் கூறியுள்ளார்.