செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 18 டிசம்பர் 2021 (17:11 IST)

மீண்டும் சொதப்பிய இங்கிலாந்து… பாலோ ஆன் கொடுக்காத ஆஸ்திரேலியா!

ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி மிக மோசமாக விளையாடி வருகிறது.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது அடிலெய்ட் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 473 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது .

அதையடுத்து ஆடிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 236 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அந்த அணியின் ஜோ ரூட் மற்றும் டேவிட் மலான் ஆகிய இருவர் மட்டுமே நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தனர். மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இதனால் ஆஸி அணி முதல் இன்னிங்ஸில் 237 ரன்கள் முன்னிலை பெற்றது.  பாலோ ஆன் கொடுக்காமல் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து ஆடிய ஆஸி அணி ஆட்ட நேர முடிவில் 45 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட் இழந்துள்ளது.