வியாழன், 2 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (09:24 IST)

தினேஷ் கார்த்திக்கை ஏன் பயன்படுத்தாமல் இருக்கிறார்கள்… ஆஸ் வீரர் கேள்வி!

கடந்த பல ஆண்டுகளாக அணியில் தனது இடத்துக்காக போராடிவந்த தினேஷ் கார்த்திக் தனது 37 ஆவது வயதில் தற்போது டி 20 அணியில் பினிஷராகக் கலக்கி இடம்பிடித்து வருகிறார். இதையடுத்து தற்போது அணியில் இடம்பிடித்து வரும் அவர் ஆசியக் கோப்பை தொடரில் இடம்பிடித்தார். ஆனால் அவருக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்கள் விழுந்தபோதும் அவரை இறக்காமல் அக்ஸர் படேலை இறக்கினர். அதன் பின்னர் இறங்கிய தினேஷ் கார்த்திக் 6 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.

இந்நிலையில் ஆஸி அணியின் முன்னாள் வீரர் மேத்யு ஹெய்டன் “தினேஷ் கார்த்திக் அணியில் என்ன ரோல் செய்கிறார் என்று தெரியவில்லை. அவரை நம்பி இன்னும் முன்னதாகவே இறக்க வேண்டும். அவரால் அப்போது இன்னும் சிறப்பாக விளையாட முடியும்” எனக் கூறியுள்ளார்.