1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Dinesh karthik said that he is ready for world cup 100 percent

நான் 100 சதவீதம் ரெடி.. டி 20 உலகக் கோப்பையில் விளையாட தினேஷ் கார்த்திக் ஆசை!

விராட் கோலி
ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. அதற்காக அமெரிக்காவில் வைக்கப்படும் விளம்பரங்களில் விராட் கோலியின் புகைப்படம்தான் இடம்பெற்றுள்ளது. ஆனால் அங்குள்ள ஆடுகளங்கள் கோலியின் பேட்டிங்குக்கு ஏற்றதாக இருக்காது என்பதால் அவரை அணியில் எடுக்க வேண்டாம் என பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக ஒரு தகவல் பரவி வந்தது. அதற்கு ரசிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவர் கண்டிப்பாக அணியில் இருப்பார் என்று தற்போது சொல்லப்படுகிறது. அவர் அணியில் இடம்பெற்றாலும் அவருக்கான இடம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் தற்போது ஷுப்மன் கில், ஜெய்ஸ்வால் என பல இளம் வீரர்கள் டி 20 கிரிக்கெட்டில் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த சீசனில் மிகச்சிறப்பாக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் டி 20 உலகக் கோப்பை அணியில் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி பேசியுள்ள தினேஷ் கார்த்திக் “ உலகக் கோப்பைக்கு இந்திய அணி பயணிக்கும் விமானத்தில் பயணம் செய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்.  தற்போதைய நேரத்தில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்புக் கிடைத்தால் மிகச்சரியாக இருக்கும். அதற்கு நான் 100 சதவீதம் தயாராக இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
கனடா கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்.. தமிழக வீரர் குகேஷ் சாம்பியன்.. குவியும் வாழ்த்துக்கள்..!