வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 21 ஏப்ரல் 2024 (16:34 IST)

‛இந்தியா’ கூட்டணி பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார்.. என்ன காரணம்?

Ragul Gandhi
இந்தியா கூட்டணி நடத்தும் பேரணியில்  ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார் என காங்கிரஸ் கட்சியின் ஜெயராம் ரமேஷ் தகவல் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஜார்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் பேரணி நடத்த திட்டமிடப்பட்டது என்பதும் இதில் காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி கலந்து கொள்வார் என்றும் முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
ஆனால் தற்போது திடீரென காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ,  ஜார்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்  கைதை கண்டித்து இந்தியா கூட்டணி நடத்தும் பேரணியில் ராகுல் காந்தி கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிவித்துள்ளார் 
 
மேலும் ராகுல் காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அவர் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் இந்தியா கூட்டணியில் கலந்து கொள்ள மாட்டார் என்றும் அவர் கூறியுள்ளார். 
 
இந்தியா கூட்டணி நடத்தும் முக்கிய பேரணியில் காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி கலந்து கொள்ள மாட்டார் என்ற அறிவிப்பு இந்தியா கூட்டணியில் உள்ள மற்ற தலைவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
Edited by Siva