1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 22 ஏப்ரல் 2024 (07:22 IST)

கனடா கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்.. தமிழக வீரர் குகேஷ் சாம்பியன்.. குவியும் வாழ்த்துக்கள்..!

கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
 
கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் அமெரிக்காவின் நகரூரா மற்றும் தமிழக கிராண்ட் மாஸ்டர் குகேஷ் ஆகிய இருவரும் மோதிய நிலையில் 14 சுற்றுகள் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் முதலிடம் பெற்றார். இதனையடுத்து அமெரிக்காவின் நகரூராவை வீழ்த்தி தமிழக கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார்.
 
இந்த வெற்றியின் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சீனாவின் டிங் லிரெனுக்கு எதிராக மோதும் தகுதியை குகேஷ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெறும் இளம் வீரர் என்ற சாதனையையும் குகேஷ் படைத்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
17 வயதான குகேஷ் இந்த இளம் வயதிலேயே கேண்டிடேட்ஸ்  தொடரை வென்ற முதல் தமிழ் வீரர் என்ற பெருமைக்குரியவர் ஆகிறார். விஸ்வநாதன் ஆனந்திற்கு பின் செஸ் கேண்டிடேட் தொடரை வெல்லும் தமிழக வீரர் மற்றும் இந்திய வீரர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva