திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 26 மே 2023 (09:01 IST)

ஜெய்ஸ்வால அதுக்குள்ள ஒருநாள் போட்டிகள்ல எடுக்கக் கூடாது… தினேஷ் கார்த்திக் சொல்லும் காரணம்!

ஐபிஎல் போட்டிகளில் இந்த முறைக் கலக்கிய ராஜஸ்தான் அணியின் இளம் ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்த சீசனில் 14 போட்டிகளில் அவர் 625 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 5 அரைசதங்கள் அடக்கம். இந்நிலையில் இந்திய அணியில் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக யாருக்காவது காயம் ஏற்பட்டால் அணியில் ஜெய்ஸ்வாலை இடம் பெற செய்யவேண்டும் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருந்தார்.

ஆனால் ரவி சாஸ்திரியின் கருத்தை விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ஏற்க மறுத்துள்ளார். அவரின் கூற்றுப்படி “இப்போது ஒரு நாள் போட்டிகளுக்கான அணியில் அவரை இடம்பெறச் செய்வதை விட டி 20 போட்டிகளுக்கான அணியில் அவரை இடம்பெற செய்யவேண்டும். அடுத்த ஆண்டு நடக்கும் டி 20 உலகக்கோப்பைக்கான அணியில் அவர் இருக்க வேண்டும். 50 ஓவர் உலகக்கோப்பைக்கு முன்பாக நமக்கு அதிகளவில் ஒருநாள் சீரிஸ்கள் இல்லை” என்று கூறியுள்ளார்.