வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 20 செப்டம்பர் 2023 (08:16 IST)

20 மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் அணியில் அஸ்வின் ஏன்? கேப்டன் ரோஹித் ஷர்மா பதில்!

ஆசியக் கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார் அக்ஸர் படேல். அவர் உலகக் கோப்பைக்குள் குணமாகாவிட்டால் அவருக்கு பதிலாக அஸ்வின் அல்லது வாஷிங்டன் சுந்தர் ஆகியவரில் ஒருவர் தேர்வாக வாய்ப்புள்ளதாக கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அஸ்வினுக்கு ஒருநாள் போட்டிகளில் விளையாடி நீண்ட இடைவெளி விழுந்துவிட்டதால், இப்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அவருக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

இது சம்மந்தமாக பேசியுள்ள ரோஹித் ஷர்மா “அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வருகிறார். அந்த அனுபவம் அவருக்கு ஒருநாள் போட்டிகளில் உதவும். அவரிடம் ஒருநாள் போட்டிகளில் பந்துவீசும் திறன் உள்ளது. அதனால்தான் இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்.  உலகக் கோப்பை தொடரில் குல்தீப் யாதவுக்கு பக்கபலமாக இருக்க மூத்த பவுலரான அஸ்வின் சரியான தேர்வாக இருப்பார்” எனக் கூறியுள்ளார்.