திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 30 ஏப்ரல் 2022 (21:03 IST)

சென்னை கிங்ஸுக்கு மீண்டும் கேப்டனாகும் தோனி!

ஐபிஎல்-15 வது சீசன்  இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

நடப்பு சீசனின் சென்னை கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகி, புதிய கேப்டனாக ஜடேஜா பொறுப்பேற்றார்.

ஒரே ஒரு போட்டியைத் தவிர மற்ற அனைத்திலும் சென்னை கிங்ஸ் அணி தோற்றுள்ளது.

இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இ ந் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து, ஜடேஜா விலகி மீண்டும் தோனியிடமே கேப்டன் பொறுப்பை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து சென்னை மீண்டு வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.