திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 20 மார்ச் 2018 (18:50 IST)

சாம்பியன் பட்டத்தை வெல்வது முக்கியமல்ல: தினேஷ் கார்த்திக்

ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வது முக்கியமல்ல என்று கோல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
 
நேற்று முன்தினம் நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற செய்தார். கடைசி பந்தில் இந்திய அணி வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தினேஷ் கார்த்திக் சிக்ஸர் விளாசி அசத்தினார்.
 
19வது ஓவரில் தினேஷ் கார்த்திக் 22 ரன்கள் குவித்தார். இறுதிப் போட்டியில் அவர் 8 பந்துகளில் 29 ரன்கள் குவித்து அசத்தினார். இந்நிலையில் அவர் தற்போது இந்தியாவின் ஹீரோவாக வலம் வருகிறார்.
 
 
இந்நிலையில், இன்று தினேஷ் கார்த்திக் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
”இந்திய அணியில்  கிடைத்த இடத்தை தக்கவைக்க சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே முடியும். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவதே எனது நீண்ட நாள் விருப்பம். ஆனால், எந்த வீரர் எந்த அணியில் விளையாட வேண்டும் என்பதை ஐபிஎல் ஏலம் தான் முடிவு செய்கிறது.
 
கொல்கத்தா அணி கேப்டனாக சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பது முக்கிய நோக்கமல்ல. பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டும். அதன்பின் சாம்பியன் பட்டம் வெல்வது பற்றி யோசிக்கலாம்” என கூறியிருந்தார்.