1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Dhoni may play 2025 IPL season

தோனியின் ஃபார்மைப் பார்க்கும்போது எனக்கு அதுதான் தோன்றுகிறது… சுரேஷ் ரெய்னா!

தோனி
ஐபிஎல் அடுத்த சீசனுக்கு ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களைத் தக்கவைக்கலாம் என்ற சர்ச்சைகள் நிலவி வருகின்றன. அணிகள் நான்குக்கும் மேற்பட்ட வீரர்களை தக்கவைக்க உரிமை அளிக்க வேண்டும் என பிசிசிஐயிடம் அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் பிசிசிஐ ஒரு புதிய விதியை (2021 ஆம் ஆண்டு வரை அமலில் இருந்த விதிதான்) அமல்படுத்த உள்ளதாகவும் அதை அமல்படுத்தினால்தான் தோனி சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்படுவார் என்றும் சொல்லப்படுகிறது. சர்வதேசப் போட்டிகளில் ஓய்வு பெற்று ஐந்து ஆண்டு ஆனவர்களை ‘அன்கேப்ட்’ (அதாவது உள்ளூர் வீரர்) வீரராக அறிவிக்க உள்ளதாகவும், அப்படி அறிவித்தால் தோனியை சிஎஸ்கே அனி “அன்கேப்ட் பிளேயர்” பிரிவில் தக்கவைக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

ஆனால் இதுவரை எந்த தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா “கடந்த சீசனில் தோனியின் ஃபார்மைப் பார்க்கும்போது அவர் 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனிலும் விளையாடுவார் என்று தோன்றுகிறது” எனக் கூறியுள்ளார். 
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
பல முறை தலையில் அடி… 26 வயதில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் ஆஸி வீரர்!