ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (17:56 IST)

தோனி, சச்சினை அடுத்து யுவராஜ் சிங் வாழ்க்கை வரலாறு திரைப்படம்.. யார் நடிக்க போகிறார்?

Yuvaraj Singh
பிரபல கிரிக்கெட் வீரர்களான தோனி மற்றும் சச்சின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில் அடுத்ததாக யுவராஜ் சிங்  வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் அவ்வப்போது உருவாகி வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை உருவாக்க இருப்பதாக முன்னணி நிறுவனம் ஒன்று தனது சமூக வலைத்தளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்த புகைப்படத்தையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய யுவராஜ் சிங் ஒரு போட்டியில் ஒரே ஓவரில் ஆறு சிக்சர்கள் அடித்த காட்சியும் இந்த வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. தோனி மற்றும் சச்சின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் போலவே இந்த படத்திலும் சுவாரசியமான காட்சிகள் இணைக்கப்படும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து விஷயங்களும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் யுவராஜ் கேரக்டரில் நடிக்க பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva