1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 14 டிசம்பர் 2017 (12:43 IST)

தோனியால் சர்ச்சை: ட்வீட்டை லைக் செய்தது ஒரு குத்தமா!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஒரு ட்வீட்டை லைக் செய்ததின் மூலம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
 
தோனி சமூக வலைதளமான ட்விட்டரில் கணக்கு வைத்திருந்தாலும், அதில் அவரது செயல்பாடுகள் மிகவும் குறைவு தான். கடந்த 2009-ஆம் ஆண்டு ட்விட்டர் கணக்கை தொடங்கிய அவரை 68 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். ஆனால் இந்த எட்டு ஆண்டுகளில் அவர் வெறும் 45 ட்வீட்டுகளை மட்டுமே பதிவிட்டுள்ளார்.
 
இது கூட பரவாயில்லை, வெறும் மூன்றே மூன்று முறை மட்டுமே அவர் மற்றவர்களின் ட்வீட்டை லைக் செய்துள்ளார். கடந்த செவ்வாய் கிழமை அவர் லைக் செய்த அந்த மூன்றாவது ட்வீட் தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்கபார் என்ற செய்தித் தளத்தின் ட்விட்டர் பக்கம் ஒரு ட்வீட்டை பதிவிட்டது. அதில், 2019-ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பைப் போட்டியில் கோலி தலைமையிலான அணி நிச்சயம் வெற்றிபெறும். மேட்ச் பிக்ஸிங் செய்யப்பட்டுவிட்டது என குறிப்பிட்டிருந்தது. இந்த ட்வீட்டை தோனி லைக் செய்தது தான் சர்ச்சைக்கு காரணம். அந்த ட்வீட்டில் கோலி, ரவிசாஸ்த்ரி, கங்குலி, சச்சின், கபில்தேவ், காம்பீர் உள்ளிட்ட இந்திய அணியைச் சேர்ந்த முக்கியமானவர்களின் பெயர்களும் டேக் செய்யப்பட்டிருந்தது.