1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 9 ஜூன் 2023 (15:07 IST)

எங்கள் தலைமுறையின் மிகச்சிறந்த டெஸ்ட் வீரர் ஸ்மித்தான்… கோலி புகழாரம்!

நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தனது 31 ஆவது சதத்தை அடித்துள்ளார் ஸ்டீவ் ஸ்மித். இந்த போட்டியில் ஆஸி அணி தடுமாறிய போது நிலைத்து நின்று ஆடி, அணியை சரிவில் இருந்து மீட்டார்.

இந்நிலையில் கோலி தற்போது ஸ்டிவ் ஸ்மித்தை இந்த தலைமுறையின் மிகச்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என பாராட்டியுள்ளார். இது சம்மந்தமாக “ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்றபடி, விளையாடுவதில் அவருக்கு ஈடு இணையே இல்லை.  அவர் செய்துள்ள சாதனைகளே அவரை பற்றி பேசும். 90 டெஸ்ட்களுக்கு பிறகு அவரின் சராசரி 60+ என இருப்பது நம்பமுடியாத ஒன்றாகும். அவரது விக்கெட்டை எடுப்பது மிகப்பெரிய சவால் ஆகும்” எனக் கூறியுள்ளார்.

ஸ்மித் கடந்த 12 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். இதுவரை 8,913 ரன்கள் குவித்துள் அவர் 31 சதங்கள் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.