1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Dhoni did not give advise to ruthuraj for this reason

இந்த விஷயத்தில் என்னிடம் அட்வைஸ் கேட்காதே… ருத்துராஜிடம் கைவிரித்த தோனி!

MS Dhoni
ஐபிஎல் 2024 சீசன் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்னர் சி எஸ் கே கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியதாகவும், அவருக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

கேப்டன் பொறுப்பேற்றுள்ளது குறித்து பேசிய ருத்துராஜ் “சிறப்பாக உணர்கிறேன். சி எஸ் கே பொறுப்பேற்று இருப்பது தனிச்சிறப்புகொண்டது. ஆனால் இது மிகப்பெரிய பொறுப்பு. ஏனென்றால் எங்களிடம் இருக்கும் ப்ளேயர்களை நினைத்து மிகவும் உற்சாகமாக உணர்கிறேன். அனைவருமே நல்ல அனுபவத்தைக் கொண்டவர்கள். அதனால் நான் செய்ய வேண்டியது பெரிதாக எதுவும் இருக்காது. அணியில் தோனி, ஜட்டு, அஜிங்க்யே ரஹானே ஆகியோர் இருக்கிறார்கள். அதனால் கவலைப்பட பெரிதாக ஒன்றும் இல்லை. இந்த தொடரை அனுபவித்து விளையாட ஆர்வமாக இருக்கிறேன்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது வர்ணனையாளரும் முன்னாள் சி எஸ்கே வீரருமான பத்ரிநாத் சி எஸ் கே அணி பற்றி ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “சமீபத்தில் நடந்த லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் அடுத்த ஒவரை யாரை வீசவைக்கலாம் என ருதுராஜ் தோனியிடம் கேட்டபோது என்னிடம் அதைக் கேட்காதே என தோனி கூறிவிட்டாராம். பீல்டிங் சம்மந்தமான அட்வைஸ் வேண்டுமென்றால் நான் கூறுகிறேன். இதையெல்லாம் நீயே பார்த்துக்கொள்” எனக் கூறிவிட்டார் என்று கூறியுள்ளார். அணியின் எதிர்கால நன்மைக்காக தோனி இப்படி கூறியிருக்கலாம் என சொல்லப்படுகிறது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
முத்துப் பாண்டியான ரஷீத் கானையே பொளந்து எடுத்து கில்லி வில் ஜாக்ஸ்… கோலியின் ரியாக்‌ஷன்!