1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Dhoni chosen bollywood over politics

பாலிவுட்டா? அரசியலா?... என்ற கேள்விக்கு தோனியின் பதில் இதுதான்!

தோனி
இந்திய கிரிக்கெட்டில் உருவான மிகச்சிறந்த கேப்டனாகவும் கிரிக்கெட்டராகவும் தோனி உள்ளார். சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அவர் இப்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார்.

ஐபிஎல் தவிர்த்து மற்ற நேரங்களில் விவசாயம், நண்பர்களோடு சுற்றுப்பயணம் என மகிழ்ச்சியாக வாழ்க்கையைக் கழித்து வருகிறார். தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் காலடி எடுத்து வைத்தார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் பாலிவுட்டுக்கு செல்ல விருப்பமா அல்லது அரசியலுக்கு செல்ல விருப்பமா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் “பாலிவுட். ஆனால் இப்போது என்னை நடிக்க சொல்லாதீர்கள். எனக்கு இப்போது எதிலும் ஆர்வமில்லை” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
நான் தோனியோடு ரோஹித்தை ஒப்பிடுவேன்… அதைவிட சிறந்த கௌரவம் அவருக்கு இல்லை – ரவி சாஸ்திரி