இலங்கை பந்துவீச்சை அடித்து தும்சம் செய்த தவான்: இந்திய அணி வெற்றி!


Abimukatheesh| Last Updated: ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2017 (20:57 IST)
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

 

 
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி தற்போது ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இன்று முதல் ஒருநாள் போட்டி தம்புலாவில் நடைப்பெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 
 
அதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணி 43.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 216 ரன்கள் குவித்தது. இதையடுத்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி.
 
தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் மற்றும் தவான் களமிறங்கினர். ரோகித் 4 ரன்களில் ரன் அவுட் ஆனார். அதைத்தொடர்ந்து கேப்டன் விராட் கோலி தவானுடன் இணைந்தார். தவான் தொடர்ந்து அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். கோலி ஆரம்பத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்தார். அதன்பின் கோலியும் தவானுடன் இணைந்தார். இருவரும் சேர்ந்து இலங்கை பந்துவீச்சாளர்களை தெறிக்கவிட்டனர்.
 
28.5 ஓவரில் இந்திய அணி 220 ரன்கள் அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்றது. தவான் 90 பந்துகளில் 132 ரன்கள் குவித்தார். விராட் கோலி 70 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார். 


இதில் மேலும் படிக்கவும் :