1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2017 (15:28 IST)

ஒருநாள் போட்டி: இலங்கை அணி முதல் பேட்டிங்

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி இன்று நடைபெறும் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.


 

 
இலங்கையில் சுற்றுபயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி டெஸ்ட் போட்டி தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இன்று முதல் ஒருநாள் போட்டி தம்புலாவில் நடைப்பெறுகிறது.
 
இதில் டாஸ் வென்ற இந்திய முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 10 ஓவர் முடிவில் 55 ரன்கள் குவித்துள்ளது. இலங்கை அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.