என் வலது கண்ணில் பார்வையை இழந்து வந்தேன்… டிவில்லியர்ஸ் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!
தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் எனவும் அழைக்கப்படும் டிவில்லியர்ஸ் 2018 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கூட தொடரில் கூட விளையாடாமல் அவர் ஓய்வை அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இப்போது தன்னுடைய ஓய்வுக்கான காரணம் குறித்து டிவில்லியர்ஸ் கூறியுள்ளார். தன்னுடைய யு ட்யூப் சேனலில் இது குறித்து பேசியுள்ள டிவில்லியர்ஸ் “என்னுடைய மகன் விளையாடும் போது ஷூவால் என் வலது கண்ணில் இடித்துவிட்டார். அதிலிருந்து அந்த கண்ணில் பார்வை குறைய ஆரம்பித்தது. ஆனால் நான் முதலில் இதற்காக அறுவை சிகிச்சை செய்துகொள்ளவில்லை. அதன் பிறகு மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி அறுவை சிகிச்சை மேற்கொண்டேன்.
மருத்துவர்கள் எப்படி உங்களால் ஒரு கண் பார்வையால் விளையாட முடிந்தது எனக் கேட்டனர். இடது கண்ணில் பார்வை நன்றாக இருந்ததால் என்னால் கடைசி இரண்டு ஆண்டுகள் சிறப்பாக விளையாட முடிந்தது. இதன் காரணமாகதான் நான் ஓய்வை அறிவித்தேன்” எனக் கூறியுள்ளார்.