ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 4 டிசம்பர் 2023 (07:49 IST)

பல ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் படத் தயாரிப்பில் இறங்கும் ஏவிஎம்… ரிஸ்க் எடுக்காம கல்லா கட்ட முடிவு!

தமிழ் சினிமாவின் புராதணமான சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் ஏவிஎம் நிறுவனம் இன்று வரை இயங்கி வருகிறது. ஆனால் சமீப காலமாக படங்களைத் தயாரிப்பதில் இருந்து விலகிக் கொண்டு மற்ற பணிகளில் மட்டுமே ஈடுபாடு காட்டியது. ஆனால் இப்போது மீண்டும் தயாரிப்பில் இறங்க உள்ளது. சமீபத்தில் அருண் விஜய் நடிக்க, ஈரம் அறிவழகன் இயக்கிய தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் சீரிஸ் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றது.

இதையடுத்து இப்போது ஏவிஎம் நிறுவனம் மீண்டும் படத் தயாரிப்பில் இறங்க உள்ளது. ஆனால் அவர்கள் படம் தயாரிக்கப் போவது தமிழில் இல்லை. தெலுங்கில் ஒரு படத்தை தயாரிக்க உள்ளனர். ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளியான அயன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

அந்த படத்தை இப்போது தெலுங்கில் ரீமேக் செய்ய ஏவிஎம் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.