திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 30 டிசம்பர் 2020 (12:55 IST)

”செத்த பயலுகளா” புகழ் ஜி.பி.முத்து விருதை பெறும் வார்னர்! – வைரலாகும் சேட்டையான விருது!

இந்த ஆண்டோடு ஒரு தசாப்தம் முடிவதால் ஐசிசி பல வீரர்களுக்கு விருது வழங்கி வரும் நிலையில் தனக்கு தானே ஒரு விருதை வழங்கி கொண்டுள்ளார் டேவிட் வார்னர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாமல், டிக்டாக் மூலமாகவும் மிகவும் பிரபலமானவர். முக்கியமாக தென்னிந்திய மொழி படங்களின் பட பாடல்களுக்கு இவர் குடும்பத்துடன் ஆடும் நடனங்கள் மிகவும் பிரபலம். மனுசன் ஆடுவதோடு நிறுத்தி கொள்ளாது சென்னையில் வெள்ளம் வந்தால் கூட சொந்த ஊரில் வெள்ளம் வந்ததுபோல அதுகுறித்து விசாரித்து போஸ்ட் போடும் பாசக்காரர்.

இந்த 2020 முடியும் நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக விளையாடிய கிரிக்கெட் வீரர்களுக்கு ஐசிசி விருதுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர் சார் ஜி.பி.முத்து விருதான இந்த பத்தாண்டுகளில் சிறந்த ஐசிசி சிறந்த ஆண் டிக்டாக்கர் என்ற விருதை பெறுவதாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
சேட்டையான வார்னரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது