தொடர்புடைய செய்திகள்
- 3 லட்சத்திற்கு கீழ் குறைந்த சிகிச்சை எண்ணிக்கை – இந்தியாவில் கொரோனா!
- அடுத்தடுத்து விழுந்த 2 விக்கெட்டுக்கள்: ரஹானே, விஹாரி பொறுப்பான ஆட்டம்!
- உலக கொரோனா பாதிப்பு 8.07 கோடி, குணமானோர் 5.68 கோடி!
- ’’தமிழக வீரப் பெண்மணி’’ வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவுள்ள நயன்தாரா??
- விஜய்யின் ’’மாஸ்டர்’’ பட டீஸர் புதிய சாதனை !! ரசிகர்கள் கொண்டாட்டம் !
இரண்டாவது டெஸ்டில் அசத்தும் இந்தியா! – ரஹானே சதம் விளாசி அட்டகாசம்!
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான சுற்றுப்பயண ஆட்டத்தின் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 72 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 195 ரன்கள் பெற்றிருந்தது. இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் இரண்டாவதாக களம் இறங்கியுள்ள இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
தொடக்கநிலை பேட்ஸ்மேனான மயங்க் அகர்வால் ரன்களே எடுக்காமல் வெளியேறினாலும், சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 45 ரன்கள் வரை ஸ்கோர் செய்தார். தொடர்ந்து விளையாடி வரும் அணி கேப்டன் அஜிங்க்ய ரஹானே 200 பந்துகளுக்கு 104 ரன்கள் ஸ்கோர் செய்துள்ளார். 91 ஓவர்கள் முடிவில் 277 என்ற ரன் கணக்கில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது.