1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. David Warner and Cameron Bancroft to return to competitive cricket through Darwin Strike League

உள்ளூர் போட்டியில் விளையாட தயாரான வார்னர், பான்கிராப்ட்

வார்னர்
ஜுலை மாதம் தொடங்கவிருக்கும் என்டி ஸ்டிரைக் கிரிக்கெட் தொடரில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடைபெற்ற வார்னர், பான்கிராப்ட் விளையாடவுள்ளனர்.
 
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் பேன்கிராப்ட் பீல்டிங் செய்த போது ஸ்மித்தின் உதவியுடன் பந்தை பொருள் ஒன்றால் சேதப்படுத்தி உள்ளார். ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவன் சுமித்தும் இந்த விவகாரத்தை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்தியதால் ஸ்மித்திற்கு சர்வதேச ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாட தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாதம் விளையாட தடையும் விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது.
 
சர்வதேச போட்டியில் அவர்களுக்கு தடைவிதிக்கப்பட்டாலும் உள்ளூர் போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்தது. இதனையடுத்து, வார்னர் மற்றும் பான்கிராப்ட் ஆகிய இருவரும் வரும் ஜுலை மாதம் டார்வினில் தொடங்கவிருக்கும் என்டி ஸ்டிரைக் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளனர்.
 
இதேபோல் ஸ்மித் வரும் ஜுலை மாதம் கனடாவில் தொடங்கவுள்ள டி20 தொடரில் விளையாடவுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
டிவில்லியர்ஸின் ஓய்வு தென்னாப்பிரிக்காவுக்கு மிகப்பெரிய இழப்பு- கிரேம் ஸ்மித்