ஸ்மித், வார்னருக்கு மீண்டும் விளையாட அனுமதி!

s
Last Modified வெள்ளி, 11 மே 2018 (16:30 IST)
கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஒராண்டு தடைபெற்ற வார்னர், ஸ்மித்துக்கு உள்ளூர் போட்டிகளில் விளையாட அனுமதி கிடைத்துள்ளது.
 
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் பேன்கிராப்ட் பீல்டிங் செய்த போது ஸ்மித்தின் உதவியுடன் பந்தை பொருள் ஒன்றால் சேதப்படுத்தி உள்ளார். ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவன் சுமித்தும் இந்த விவகாரத்தை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்தியதால் ஸ்மித்திற்கு ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாட தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாதம் விளையாட தடையும் விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது.
 
இதனையடுத்து, ஸ்மித் தான் செய்த தவறுக்கு ரசிகர்களிடம் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டார். இதனால் அவருக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய ரசிகர்கள் குரல் கொடுத்து வந்தனர். 
s
 
இந்த நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் வார்னர் மற்றும் ஸ்மித்துக்கு உள்ளூர் போட்டிகளில் விளையாட அனுமதி வழங்கியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :