என் குடும்பத்தில் யார் இறந்தாலும் பரவாயில்லை, அடுத்த முறை வாழ்த்து சொல்கிறேன் –ஸ்டெயின் ஆதங்கம்!
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் தன்னை ட்ரோல் செய்தவர்களுக்கு கடுமையாக பதிலளித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் சமீபத்தில் தனது சமூகவலைதளப் பக்கத்தில் கடுமையான வார்த்தைகளைப் பகிர்ந்துள்ளார். அதற்குக் காரணம் சமீபத்தில் ஆஸியின் சுழல்பந்து வீச்சாளர் நாதன் லயன் 400 விக்கெட்கள் என்ற மைல்கல்லைக் கடந்தபோது அவர் வாழ்த்தவில்லை என ரசிகர்கள் ட்ரோல் செய்ததுதான்.
இதுகுறித்து பதிலளித்துள்ள ஸ்டெய்ன் அப்போது என் தாத்தா இறந்துவிட்டார். நான் அவருடனும் குடும்பத்துடனும் இருந்தேன். அதனால் என்னால் வாழ்த்த முடியவில்லை. அடுத்தமுறை என் குடும்பத்தில் யார் இறந்தாலும் பரவாயில்லை என முதலிலேயே வாழ்த்து சொல்லிவிடுகிறேன் எனக் கூறியுள்ளார்.