1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 16 டிசம்பர் 2021 (12:09 IST)

காங்கோவில் இருந்து வந்த பெண்ணுக்கு கொரோனா!

காங்கோவில் இருந்து வந்த பெண்ணுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என  மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல். 

 
உலகம் முழுவதும் கொரோனாவின் வீரியமடைந்த வகை வைரஸான ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் ஒமிக்ரான் உறுதியான நிலையில் தமிழகத்தில் முதல் ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. நைஜீரியா நாட்டிலிருந்து தமிழகம் வந்த நபருக்கு ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 
 
இந்நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், காங்கோவில் இருந்து வந்து ஆரணி சென்ற பெண்ணுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது என  கூறியுள்ளார். ஆரணி சென்ற பெண்ணுக்கு ஒமைக்ரானுக்கு முந்தைய அறிகுறி தெரிவதால் மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.