1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 28 ஏப்ரல் 2024 (10:56 IST)

சேப்பாக்கத்தை அமைதிப்படுத்த ப்ளான் போடும் கம்மின்ஸ்? திரும்ப அடிக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்? – இன்று SRH vs CSK மோதல்!

CSK vs SRH
இன்று மாலை நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இந்த சீசனின் இரண்டாவது மோதலை மேற்கொள்வதால் பரபரப்பு எழுந்துள்ளது.



இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் 200+ டார்கெட் வைத்து எதிரணியை கலங்க செய்யும் சன்ரைசர்ஸ் அணி 8 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆப் தகுதி பெற அடுத்த 6 போட்டிகளில் 5 போட்டிகளிலாவது வென்றாக வேண்டிய சூழல் உள்ளது. முன்னதாக இந்த சீசனில் ஏற்கனவே சன்ரைசர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதிக்கொண்ட நிலையில் அதில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸிடம் தோல்வி அடைந்தது.

கடந்த 4 போட்டிகளாக தோல்வியையே சந்திக்கா சன்ரைசர்ஸ் இன்றைய போட்டியிலும் அடித்து ஆடி சேப்பாக்கம் மைதானத்தை அமைதிப்படுத்த முயற்சிக்கும் வாய்ப்பு உள்ளது. அதேசமயம் முன்னாள் தோல்விக்கு இன்று ஹோம் க்ரவுண்டில் சிஎஸ்கே பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இங்கிலாந்து பந்து வீச்சாளர் ரிச்சர்ட் க்ளீசன் இந்த போட்டியில் இறக்கப்படலாம் என்றும் எதிர்பார்ப்பு உள்ளது.

Edit by Prasanth.K