டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் செய்ய முடிவு!

CSK
Last Updated: வெள்ளி, 11 மே 2018 (19:37 IST)
தொடரின் இன்றைய போட்டியில் சென்னை - ராஜஸ்தான் அணிகள் விளையாகிறது.

 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் முடிவு செய்துள்ளது.
 
அதன்படி சென்னை அணி முதலில் களமிறங்குகிறது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடி உள்ள ராஜஸ்தான் அணி 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் மீதமுள்ள 4 போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியான சூழலில் உள்ளது. தொடர்ச்சியாக விளையாடும் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்புள்ளது.
 
ஹைதராபாத் மற்றும் சென்னை அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்வது உறுதியாகிவிட்டது. பஞ்சாப் அணி மூன்றாவது அணியாக உள்ளது. நான்காவது அணி எது என்பதில் பெரும் போட்டி நிலவுகிறது. இந்த நான்காவது இடத்திற்கு கொல்கத்தா, ராஜஸ்தான், மும்பை ஆகிய அணிகள் போட்டி போட்டு வருகின்றனர்.
 
சென்னை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தால் டெல்லி, பெங்களூர் அணிகள் போன்று இந்த அணியும் வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :