1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 11 மே 2018 (15:01 IST)

ப்ரீத்தி ஜிந்தா - சேவாக் மோதல்? அஸ்வினால் வந்த விபரீதம்!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தாவிற்கும் அணியின் ஆலோசகர் சேவக்கிற்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அஸ்வின்தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. 
 
ஐபிஎல் 2018 சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றை உறுதிப்படுத்தும் நிலையில் உள்ளது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றியை பதிவு செய்துள்ளது. 
 
இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில், ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டு தோல்வி அடைந்தது. இதனால், பிரச்சனை துவங்கியுள்ளது. 
 
போட்டியின் போது முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியின் துவக்க வீரர்  கிறிஸ் கெய்ல் 1 ரன் எடுத்த நிலையில் ஸ்டம்பிங் ஆனார். 
 
அதன்பின் கருண் நாயர், மனோஜ் திவாரி, நாத் போன்றோர் முன்னணி பேட்ஸ்மேன்கள் இருக்கையில், யாரும் எதிர்பார்க்காத நிலையில் அஸ்வின் களம் இறங்கினார். 
 
அஸ்வின் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். கேஎல் ராகுல் போராடியும் போட்டியில் வெற்றி பெற முடியவில்லை. அஸ்வினை 3வது இடத்தில் களம் இறக்க சேவாக் கூறியதாக கூறப்படுகிறது. 
 
இதனால் தோல்விக்கு பின்னர், ப்ரீத்தி ஜிந்தா மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் பஞ்சாப் அணியில் இருந்து சேவாக் வெளியேற வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.